“போரம்மா உனையன்றி யாரம்மா..”, “பூத்தகொடி பூக்களின்றி தவிக்கிறது…’, போன்ற பாடல்கள் பாடல் மூலம் பிரபலமான எழுச்சிப் பாடகரும் உணர்வாளருமான சங்கீத கலாபூஷணம் செல்லத்துரை குமாரசாமி (வயது 72) நேற்று காலமானார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்தவரான இவர் இசைக்கலைஞர் என்பதைத் தாண்டி ஓவியராகவும் திகழந்தார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இசைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய குமாரசாமி இசைத்துறையில் சிறந்த ஆளுமையாளராகவும் திகழ்ந்தார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்து பல பாடல்களை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.