முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பான வழக்கு விசாரணை மேற்கொள்ளவே மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.