பலோப்பியன் குழாய் வெடித்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புலோலி தெற்கு காந்தியூரைச் சேர்ந்த அனுஷன் துளசி (வயது-30) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.
இவர்மன்னார் மாவட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று காலை இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவர் உறவினர்களால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் உயிரிழந்து விட்டாரெனத் தெரிவித்தனர்.
அவரின் பிரேத பரிசோதனையை நடத்திய சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் வாசுதேவா, ”பலோப்பியன் குழாயில் கரு தங்கியதால் அது வெடித்து ஏற்பட்ட இரத்தக் கசிவால் மரணம் சம்பவித்தது’, என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி ச.சிவராசா விசாரணைகளை நடத்தினார்.