உள்ளூராட்சியில் ஊழலுக்கு இடமில்லை – அமைச்சர் நளிந்த!

உள்ளூராட்சியில் ஊழலுக்கு இடமில்லை - அமைச்சர் நளிந்த!

Editor 1

ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். இதன் போது எவரேனும் மோசடிகளில் ஈடுபட முற்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்புடனேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம். அதற்கமைய பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலேயே கிராமிய அபிவிருத்தி குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அபிவிருத்தி இலக்குகளை அடைவதும் இலகுவானதாகும்.

ஊழல், மோசடிகளை ஒழித்து ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு எதிராக எவரேனும் செயற்படுவார்களாயின் அது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதாகும்.

அது மாத்திரமின்றி அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். எனவே ஊழல், மோசடிகளில் ஈடுபடாத எவரும் ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை.

ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். இதன் போது எவரேனும் மோசடிகளில் ஈடுபட முற்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

Share This Article