20 வருடங்களில் பெரும் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

editor 2

நிலவும் காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பெரும் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு தற்போதிருந்து தயாராக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுகேகொடை அனுலா வித்தி யாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தாது நாம் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Share This Article