ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கை தொடர்பில் எதுவும் பேசவில்லை. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க உரையை ஆற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், அதில் அவர் இலங்கை குறித்து எதனையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.