விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

editor 2

ஆலயத்தின் உண்டியலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த
முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சரசாலை தெற்கு, சாவகச்சேரியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது
71) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

உயிரிழந்த முதியவர், கடந்த 16ஆம் திகதி வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில்
சிமெந்தால் அமைக்கப்பட்ட உண்டியலுடன் மோதுண்டு மயக்கமடைந்தார்.

சாவகச்சேரி ஆதார மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு
சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share This Article