விரைவில் மாகாணசபைத் தேர்தல்?

விரைவில் மாகாணசபைத் தேர்தல்?

editor 2

மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்தும் அரசாங்கத்தின் திட்டம் மாறாது என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி சரிந்துள்ளதால், மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முடிவை அரசாங்கம்
பிற்போடக்கூடும் என எதிரணிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏற்கனவே அரச தரப்பால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, அந்த முடிவில் மாற்றம் வராது என்றும் குறித்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

Share This Article