எங்களை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகிட்டாது – நாமல்!

எங்களை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகிட்டாது - நாமல்!

editor 2

எங்களை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகிட்டாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும் கடந்த அரசாங்கங்களையும்
விமர்சித்துக் கொண்டிருக்காமல், சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள் இவ்வாறு சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய
போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 07 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அரசாங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? உப்பு பிரச்னைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே.

நாட்டு மக்கள் மரமுந்திரிகை சாப்பிடுவதை போன்று உப்பு சாப்பிடுவதில்லை என்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கிறது. உணவின் அடிப்படை பொருளாகவே உப்பு காணப்படுகிறது. ஆகவே, உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்னைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள்.

Share This Article