தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன் நிறைவு!

தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன் நிறைவு!

editor 2

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின்
உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்படுமென பரவும் தகவல் பொய்யானதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர்ந்த வேறு இடங்களில் வாக்களிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

உரிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என்ற நியாயமான அச்சம் ஏற்படும்போது வேறு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்குமாறு கோர முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் பரவும் பொய்யான தகவல்களை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Share This Article