யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ‘யாழ் ராணி’ ரயில் மோட்டார் சைக்கிளை மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் பளை கச்சாய்வெளி புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில், பளை – தம்பகாமத்தை சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த விபத்துக் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.