கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை – பொதுஜன பெரமுன எச்சரிக்கை!

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை - பொதுஜன பெரமுன எச்சரிக்கை!

editor 2

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், அதற்கெதிராக கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தவிர வேறு எந்த வேட்பாளரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அல்லது
கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக செயற்படும் எந்த வொரு கட்சி உறுப்பினருக்கும் இது பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share This Article