விசாக பூரணை தினத்தையொட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் 20 பேர் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக் கைதிகள் 388 பேர் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 20 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.