இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி. மு. க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி தொடக்கம் ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் தி. மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி, பா. ஜ. க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அ.தி. மு. க. தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.
நேற்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தி. மு. க.கூட்டணி வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் வழக்கமாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அ. தி. மு.க. கூட்டணி பின்னடைவை சந்தித்தது.
அதன் இடத்தை பா. ஜ. க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதே போன்று, நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.