உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிரதான குழுவின் கீழ் மேலும் பல குழுக்களை உருவாக்கியுள்ளோம் பிரதான குழு ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்கனவே ஆராய ஆரம்பித்துள்ளது.
66,000 பக்க அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கிடைக்கும் புதிய விடயங்கள் குறித்து புதிய விசாரணைகளை முன்னெடுப்போம்,என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.