பால் குடித்தால் சிறுநீரக கற்கள் உண்டாகுமா? ஆய்வுகள் சொல்லும் உண்மை

cyberiolk

சிறுநீரக கற்கள் நமது சிறுநீரகத்தில் உருவாகும் சிறிய கடினமான துகள்களாகும். அந்த சிறிய துகள்கள் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகக் கல் பிரச்சனை என்பது தற்போது ஒரு பொதுவான நோயாக இருந்தாலும், சிறுநீரக கற்கள் உருவாவதோடு தொடர்புடைய பல தவறான கருத்துக்கள் உள்ளன. எவ்வளவு கால்சியம் சிறுநீரகங்களுக்கு நல்லது, யார் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மக்களுக்குள் இருக்கும் பொதுவான கேள்விகளாகும். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி மிகவும் வேதனையளிக்கும் அதே வேளையில், உடல்நலப் பிரச்சினையைப் பற்றி சரியான விழிப்புணர்வை வைத்திருப்பது எப்போதும் கட்டாயமாகும். இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில லவ்வர் வந்ததுக்கு அப்புறம் எல்லாமே வெற்றிதானாம். உங்க ராசி என்ன? சிறுநீரகக் கற்கள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் அதனைப் பற்றிய உண்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். 

கட்டுக்கதை 1:

பால் குடிப்பது சிறுநீரகக் கற்களை உண்டாக்குகிறது உண்மை: பாலில் உள்ள கால்சியம் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு காரணமாகிறது என்ற தவறான பரவியுள்ளது. இருப்பினும், பால் உள்ளிட்ட பால் பொருட்களின் சில பகுதிகளை உட்கொள்வது சிறுநீரக கல் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல மூலமாகும் மற்றும் இது சிறுநீரகக் கல் உருவாவதை ஊக்குவிக்காது. 

கட்டுக்கதை 2:

அனைத்து சிறுநீரகக் கற்களும் வலி மிகுந்தது உண்மை: சிறுநீரகக் கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துவது என்பது மிகவும் பொதுவானது, ஆனால் சில சமயங்களில் ஆரம்பத்தில் அதன் இருப்பைக் கூட உணர முடியாது அல்லது எந்த அறிகுறிகளையும் காட்டாது. இந்த மறைக்கப்பட்ட கற்கள் மற்ற மருத்துவ சிக்கல்கள் மற்றும் நோயறிதல் நடைமுறைகளின் போது தற்செயலாக கண்டறியப்படுகிறது. உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ளணுமா? இதில் ஒன்றை தினமும் குடிங்க.! 

கட்டுக்கதை 3:

எலுமிச்சைப்பழச்சாறு குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும் உண்மை: எலுமிச்சையில் சிட்ரேட் என்றழைக்கப்படும் ஒரு பொருள் உள்ளது, மேலும் எலுமிச்சையை திரவமாக உட்கொள்வதன் மூலம் சில சிறுநீரக கற்களைத் தவிர்க்க உதவுகிறது. ஆனால் இது எப்போதும் மந்திரம் போல வேலை செய்யாது மற்றும் கற்களை முழுமையாக கரைத்துவிடாது. சிறுநீரக கற்களை கரைக்க, பயனுள்ள மருத்துவ பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம். 

கட்டுக்கதை 4:

ஆண்களுக்கு மட்டுமே சிறுநீரகக் கற்கள் வரும் உண்மை: ஆய்வுகளின்படி, ஆண்களுக்கு சிறுநீரகக் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், தற்போது இந்த பாலின இடைவெளி குறைந்து வருகிறது. பெண்களும் பொதுவாக சிறுநீரக கற்களை அனுபவிக்கிறார்கள் மற்றும் இதற்குப் பின்னால் உள்ள காரணம் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். இந்த 4 ராசிக்காரங்க ஹிட்லர் போல உங்க மீது ஆதிக்கம் செலுத்துவாங்களாம். இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க! 

கட்டுக்கதை 5:

அதிக தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்களைத் தடுக்காது உண்மை: சிறுநீரக கற்களைத் தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதே சிறந்த உத்தி. நீர் அடிப்படையில் சிறுநீரக் கற்களின் கூறுகளை நீர்த்துப்போகச் செய்கிறது, இதன்மூலம் அதனை கரைப்பது எளிதாகும். சிறுநீரகங்கள் சீராக செயல்பட நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். 

கட்டுக்கதை 6:

சிறுநீரகக் கற்கள் கால்சியத்தால் ஆனவை உண்மை: கால்சியம் அடிப்படையிலான சிறுநீரக கற்கள் அடிக்கடி உருவாகிறது, ஆனால் மற்ற வகையான கற்கள் சிறுநீரகங்களில் ஸ்ட்ரூவைட், சிஸ்டைன் மற்றும் யூரிக் அமிலம் போன்றவற்றால் உருவாகின்றன. ஒவ்வொரு கல் வகையும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உருவாகின்றன, அதனால்தான் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன.

Share This Article