குழந்தை வளர்ப்பது என்பது கலை. அந்த கலையை எல்லோரும் ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒரு பொம்மை செய்யவேண்டும் என்றால் கூட அதற்கு பயன்படுத்தும் மண்ணின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல அதில் எந்த மாதிரியான பொம்மை செய்யலாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒரு உயிருள்ள குழந்தைகளை வளர்க்கும் நாமோ அது இந்த மண்ணில் தோன்றும் முன்பே அதன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். அவர்கள் வருங்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து விடுகிறோம்.
குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி தருவது பெற்றோரின் கடமையாகும். அதை செயல்படுத்தும் விதமாக இன்றைய பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களை கையாளவும் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்தவும் உரிய பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தரும் மனப்போராட்டத்துக்கான தீர்வாக அமைந்தது எமோஷனல் இன்டெலிஜன்ஸ் எனும் உணர்வுசார் நுண்ணறிவு
இன்றைய பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்தால் நாளைய உலகம் சிறப்பாக அமையும்.
மனிதனின் 90 சதவீத மூளை வளர்ச்சி பிறந்த முதல் 6 ஆண்டுகளில் நடைபெறுகிறது. எனவே 6 வயதுக்குள் குந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதை பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம்.
குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொணடு தன்னம்பிக்கையோடு அவர்களை வளர வழிகாட்ட வேண்டும்.
பெற்றோருக்கு சொல்லவிரும்புவது-
பத்தில் ஒன்பது இந்திய குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இம்மாதிரி சூழ்நிலையில் பெற்றோர் தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்குமட்டும் தங்களுடைய குழந்தைகளை தயார் செய்யும் மனப்பாங்கு தவறானது.
இக்கட்டான சூழ்நிலையில் சரியான முறையில் அவர்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய அறிவையும், அனுபவத்தையும் குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமானது. உணர்வுசார் நுண்ணறிவுடன் வளரும் குழந்தைகள் தேர்விலும் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் போதும். அவர்களது குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும்.
மேலும் குழந்தைகளை பொம்பைகளை போல பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்கு நினைக்காதீர்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சுகந்திரத்தை கொடுங்கள். மேலும் அவர்களின் தப்புகளில் இருந்தே அவர்கள் வளர்வதற்கான வாய்ப்பை அளியுங்கள். குழந்தைகளை சிறையில் வைப்பது போல இருக்காமல் அவர்களின் சொந்தமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்கள் எடுக்கும் முடிவினால் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்த அவர்களுக்கு உதவுங்கள்.
ஒரு குழந்தையை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தால் தான். அவர்களின் தன்னமிக்கை மேம்படும். மேலும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும் சுலபமாக சமாளிப்பார்கள். ஆரமித்தில் சொன்னதுபோல குழந்தை வளர்ப்பது ஒரு கலை தான். ஆனால் இதில் நாம் ஒன்று செய்ய வேண்டாம். அவர்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ் அனுமதித்தால் போதும். மேலும் அவர்கள் வாழக்கையில் தவறு செய்யும் போது அதை எடுத்துரைத்து தீர்த்த வேண்டும். அவர்கள் துவண்டு கிடைக்கும்போது அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.