டாக் ஆப் தி டவுன் என்றால் தற்போது உடல் எடை குறைப்பது பற்றி பேச்சு தான். பெரும்பாலும் அனைவரும் இப்போது அதில் தான் நாட்டம் காட்டி வருகின்றனர். உடல் எடையை குறைத்து நமது உடலை ஒல்லியாக அழகாக பார்ப்பதற்கு கவர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும், உடல் நலனை காப்பற்றிக்கொள்ள சிலரும் இருதரப்பினராக பிரிந்து உடல் பயிற்சி செய்து வருகின்றனர்.
உடல் எடை குறைக்கும் பயிற்சி ஒரு தவம் போன்றது. தினம் உடல் பயிற்சி கூடத்திற்கு சென்றால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது. சிலர் நன்றாக உடல் பயிற்சி மேற்கொள்வார்கள், பயிற்சியாளர்கள் சொல்லும் ஐந்தையும் செய்வார்கள் ஆனாலும் அவர்களால் அவர்கள் நினைத்த அளவிற்கு உடல் எடையை குறைக்க முடியாது. எப்படியாவது ஏதேனும் ஒரு விஷியத்தில் தவறு செய்து விடுவார்கள் அது அவர்களின் மொத்த உழைப்பையும் பாழாக்கிவிடும்.
உதாரணமாக காலையில் டீ அல்லது காபி குடிப்பது, இந்த பழக்கம் பலருக்கு இருக்கின்றது. காலையில் எழுந்து காபி அல்லது டீ குடிக்காவிட்டால் அவர்களுக்கு அந்த நாளே ஓடாது. இது போன்று இருப்பர்வர்கள் என்னதான் உடல் பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல் இடை அவ்வளவு எளிதில் குறையாது.
காலையில் எழும்போதே ஒருவித சோர்வு சிலரிடம் எட்டிப்பார்க்கும். எந்த அளவிற்கு காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குகிறோமோ அதனை பொறுத்து அந்த நாளின் செயல்பாடுகள் அமையும். காலையில் எழுந்ததும் ஒருசில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் பலருடைய கைகள் செல்போனைத்தான் தேடும். படுக்கையில் இருந்தபடியே செல்போனில் சிறிது நேரம் உலாவிவிட்டுத்தான் எழுந்திருக்கவே செய்வார்கள். அப்படி செல்போனை பார்க்கும்போது கண்களில் ஒருவித சோர்வு எட்டிப்பார்ப்பதை உணரலாம். அது காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு இடையூறாக அமைந்துவிடும்.
இதுவும் உங்களின் உடல் எடையை குறைக்கும் அந்த உடல் பயிற்சிகளை செய்யவிடாமல் தடுக்கும். எனவே முடிந்தவரை காலையில் அலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்துடுங்கள். காலைலயே அலைபேசி பயன்படுத்தும்போதே அதில் ஏதாவது தவறான செய்தி அல்லது தகாத செய்தி பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது.
மேலும் அப்படி செல்போனை பார்க்கும்போது கண்களில் ஒருவித சோர்வு எட்டிப்பார்ப்பதை உணரலாம். அது காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் பருகுவது உடல் ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகலாம். கிரீன் டீயும் ருசிக்கலாம்.
இப்படியெல்லாம் செய்யும்போது உடல் பயிற்சியோடு சேர்த்து இது அனைத்தும் உங்களில் உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.
உணவு உடல் பயிற்சியின் ஒரு அங்கம். வெறும் உடல் பயிற்சி மட்டும் நமது உடல் எடையை குறைக்காது. இது போன்ற சில சின்ன சின்ன டிப்ஸ் நம் உடல் எடை குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கும். குளிப்பதற்கு முன்பாக அன்றைய நாளில் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுவிட வேண்டும். எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும்? எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுவிட்டால் தொய்வின்றி காரியங்களை செய்துவிடலாம். தேவையற்ற மன குழப்பங்களை தவிர்த்துவிடலாம்.