உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கலை இரத்துச் செய்ய மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை சார் குழுக் கூட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க குழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு அரச நிர்வாகம் ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சின் ஆலோசனைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது
மாகாண சபைகள். உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வியாழக்கிழமை (21) கூடிய அமைச்சு சார் ஆலோசனை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
துறைசார் அதிகாரிகள் தமது தேர்தல் தொகுதிக்குள் தேர்தலில் போட்டியிடுவதற்கு காணப்படும் தடைகளை நீக்குவது தொடர்பில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய திருத்தம் செய்யப்பட்ட சட்டம்,திருத்தங்களுக்கு முன்னர் இருந்தவாறு மீண்டும் மாற்றி அமைக்க வேண்டுமாயின் அதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கு அவசியம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் இடமாற்றம் செய்தல்,தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன் அரச சேவையாளர்களின் இடமாற்றம் நிறுவன தாபனக்கோவைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.