மகளின் மரணம் தொடர்பில் மனம் திறந்த விஜய் அன்ரனி!

editor 2

தன்னுடைய மகளின் மரணம் தொடர்பில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அன்ரனி சமூகவலைளத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுளளார்.

அதில்,

“ அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Share This Article