அமெரிக்காவின் வரிகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம் – சுனில் ஹந்துன்நெத்தி!

அமெரிக்காவின் வரிகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம் - சுனில் ஹந்துன்நெத்தி!

editor 2

இலங்கை மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த நடவடிக்கை நாம் எதிர்பாராதது. இது ஏற்றுமதி இலக்குகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறித்து தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது உண்மையில் ஒரு பெரிய அதிர்ச்சியாகும். இவ்வாறானதொரு தீர்மானத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த புதிய வரி அதிகரிப்பானது ஏற்றுமதியை 3 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் எமது அரசாங்கத்தின் இலக்கைத் தடுக்கக்கூடும்.

இலங்கைக்கு 44 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகக் தொடர்புகளை குறைக்கும். இது இலங்கைக்கு விகிதாசாரமாக அபராதம் விதிக்கும் ஒரு முறையாகும். எமக்கு இவ்வாறு வரி விதிக்கப்பதற்கு அமெரிக்காவிடம் எந்த அரசியல் காரணமும் இல்லை.

வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை இப்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறது. இவ்வாறான நிலைமையில் இந்தளவு வரியைத் தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி டிரம்பின் திட்டம் நீண்ட காலத்திற்கு சாத்தியமற்றதாக இருக்கலாம் என்றார்.

Share This Article