முல்லைத்தீவில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து போலி ஆசிரியர் கைது!

editor 2

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் பணியாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவருக்கு போலி பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டபோதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

குறித்த நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணி யாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரம் மற்றும்உயர் தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக் களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தினால்குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை நேற்று கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மோசடி நபர்க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளில் சித்தியடையவில்லை என்று ஆரம்ப விசாரணைகளில்தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர

Share This Article