அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!

அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!

editor 2
FILE - International Monetary Fund Managing Director Kristalina Georgieva speaks during the 2022 annual meeting of the IMF and the World Bank Group in Washington, Wednesday, Oct. 12, 2022. The managing director of the International Monetary Fund urged global policymakers, Thursday, Oct. 13, to stop inflation from becoming “a runaway train″ at a time of extraordinary economic turmoil. (AP Photo/Andrew Harnik, File)

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பால் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் இலங்கை உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மந்தமான அபிவிருத்தியின் போது அமெரிக்க வரி அதிகரிப்பானது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை தெளிவாகக் குறிக்கின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது முக்கியம்.

வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கவும் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட அமெரிக்காவையும் அதன் வர்த்தக பங்காளர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி வசந்த காலக் கூட்டங்களின் போது வெளியிடப்படும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நாணய நிதியம் தனது மதிப்பீட்டின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளும்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ் அமெரிக்காவால் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா காணப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர்களில், 70 சதவீதத்துக்கும் அதிகமானவை ஆடைத்துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article