யாழ்ப்பாணத்தில் மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துவரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் உட்பட நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பெரும் போதைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இந்தப் போதைப்பொருள் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.