வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சில இடங்களில் அதீத வெப்பநிலை உணரப்படுகின்றது.
இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
வெப்ப பாதிப்பால் நீரிழப்பு, சோர்வு ஏற்படலாம். வெப்ப பாதிப்பு அதிகரிக்கும்போது அது பக்கவாதத்துக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை ஆகிய 8 மாவட்டங்களுக்கே இந்த வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை தண்ணீரை அருந்துவதுடன், நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது அவசியம். வீட்டுக்குள் இருக்கும் முதியவர்கள், நோயாளிகள் பரிசோதிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் உடல்நலனிலும் அக்கறை காட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.