இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகின்றார். அடுத்த மாதம் 2 அல்லது 3ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று கூறப்படுகின்றது.
இந்தப் பயணத்தின்போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பணிமனையின் பிரதானி சாகலரத்நாயக்க ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை – இந்தியா இடையே பாலம், கடல்வழியாக மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த இருநாடுகளும் உயர்மட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்தப் பயணம் நிகழ்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது.
அவரின் இந்தப் பயணத்தின்போது திருகோணமலைக்கும் அவர் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கை வருவதற்கு அனுமதி கோரியுள்ளது.
இது தொடர்பில் இந்தியா தனது கரிசனையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.