கொலை, கொள்ளை குற்றங்களுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான மூவருக்கும் பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் இடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொடுத்த இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், இவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று அறிய வருகின்றது. கைதான மூவரும் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று அறிய வருகின்றது.
இவர்களுக்கு எதிராக இலங்கையில் 04 முதல் 05 கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.