நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஆஜர் செய்வதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு வாரங்களுக்கு கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தம் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இரு கைதிகளின் மரணம் மற்றும் பலரின் சுகவீனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர சந்தர்ப்பங்களில் கைதிகள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளுக்கு முன்னிலைப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் (Meningococcal disease) நோய் பரவியதன் காரணமாக கைதிகள் உயிரிழந்தும் நோய்வாய்ப்பட்டும் இருக்கலாமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் பரவி வரும் இந்த நோய் காரணமாக இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.