சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு அபாயம்!

editor 2

வறண்ட காலநிலை மற்றும் தூசி காரணமாக சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்கு பகல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இருமல் ஏற்படுவதுடன் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமைகளுக்கு தமது மருத்துவமனையில் சிகிச்சைகள் கிடைக்கப்பெறுவதால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This Article