கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற கொலையின் பின்னணியில் 8 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரு பெண்களும் அடக்கம். அத்துடன், பாதிக்கப்பட்டார் என்று கூறப்படும் சிறுமியும் பொலிஸ் நிலையத்தில் தாயாருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று அறிய வருகின்றது.
கொலையான நபர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் சித்திர வதைகள் செய்யப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதுடன், அவற்றில் இரத்தக்கசிவும் காணப்பட்டதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர் இதயநோயாளி என்பதால் அவர் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதனிடையே, கொலையானவரை சித்திர வதைக்கு உள்ளாக்கியவர்கள் அதனை தமது கைபேசிகளில் பதிவு செய்துமுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையான நபர் நேற்று முன்தினம் சடலமாக அவரின் வீட்டில் காணப்பட்டார். அவரின் மனைவி, அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர