ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் ஏலத்தினால் 300 மில்லியன் ரூபாய் இழப்பு?

ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் ஏலத்தினால் 300 மில்லியன் ரூபாய் இழப்பு?

editor 2

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுவர்ணபூமி தேசிய இயக்கத்தினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதன்போது 26 வாகனங்கள் ஏலமிடப்பட்ட நிலையில், அவற்றில் 17 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

ஏலத்தின்போது வாகனங்களின் மதிப்பீட்டுப் பெறுமதி மிகவும் குறைவாக இருந்ததாகக் கூறியே, சுவர்ணபூமி தேசிய இயக்கம் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளது.

Share This Article