பலத்த மழை தொடர்பில் எதிர்வுகூறல்!

பலத்த மழை தொடர்பில் எதிர்வுகூறல்!

editor 2

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. 

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Article