உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களில், 40 வீதமானோர் தொடர்பான தகவல்கள் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, விரைவில் குறித்த வேட்பாளர்களின் பெயர் விபரங்களை அனுப்புமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.