அவுஸ்திரேலியா இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்துள்ளது.
அதில், இலங்கை செல்பவர்கள் பொது ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
‘இலங்கைக்கான எங்கள் ஆலோசனையை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். எங்கள் ஆலோசனையின் அளவை நாங்கள் மாற்றவில்லை, இலங்கை செல்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
பொது ஆர்ப்பாட்டங்கள் இலங்கை முழுவதும் நிகழலாம் – அவை வன்முறையாகவும் மாறலாம். ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத்தவிர்க்கவும். இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சில உணவுகள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது’ என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரெடிட் கார்ட் மோசடி, அதிக கட்டணம் மற்றும் போலிபொருட்கள் உள்ளிட்ட மோசடிகள் பொதுவாக இருக்கின்ற நிலையில் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களும் நிகழலாம் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.