பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் மட்டுமே சிறைக
ளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றங்கள், சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்
பட்டுள்ளது.
இது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்
கும் வகையிலான நடவடிக்கை அல்ல.
சிறைச்சாலைகளில்தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில சிறைக் கைதிகளை தொழில் முயற்சியில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு நிறுவனங்கள் இணங்கியுள்ளன.
சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28 ஆயிரத்து 468 சிறைக் கைதிகள் இருக்கின்றனர்.
சிறைக்கைதிகளில் 50.3 சதவீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்கள் இருப்பதே சிறைச்சாலைகளில் தற்போது பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப் பொருள்
பிரச்னைக்குத் தீர்வாக அமையாது.
அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை சிறையில் அடைத்து வருவதாக சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே
இருக்கின்றனர் என்றார்.
மேலும், சிறைச்சாலைகளில் 13ஆயிரம் சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29 ஆயிரம் கைதிகள் இருக்கின்றமை
பெரும் பிரச்னையாகக் காணப்படுகிறது என்றும் கூறினார். இதனால் சிறைச்சாலைகளின் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.