காலி முகத்திடல் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புத் தொகை வெளியாகியது!

editor 2

காலிமுகத்திடலில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் (அறகலய)சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதமதிப்பு 56 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் நாடாமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியிலிருந்த மேசைகள் மற்றும் கதிரைகளுக்கு ஏற்பட்டசேதம் 14 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய், வாங்குகளுக்கானசேதம் ஒரு இலட்சத்து 62ஆயிரம் ரூபாய், கை கழுவுமிடங்களின் சேதம் 91 ஆயிரம் ரூபாய், யன்னல் கண்ணாடிகளுக்கான சேதம் 45 ஆயிரம் ரூபாய், கதவு பூட்டுகளின் சேதம் 80 ஆயிரம் ரூபாய், ஜன்னல் பூட்டுகளின் சேதம் 16 ஆயிரம் ரூபாய், மின் கதவுகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 56 ஆயிரம்,
புல் தரைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 14 இலட்சமாகும்.
மொத்தமாக 33 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளும் போது அவற்றின் இப்போதைய பெறுமதி 56 இலட்சம் ரூபாயாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 55 மேசைகள் மற்றும் கதிரைகள், 18 வாங்குகள், ஒரு கைகழுவுமிடம், யன்னல் கண்ணாடி, பத்து கதவு பூட்டுகள், 18 ஜன்னல் பூட்டுகள், 8 மின்சார கதவுகள் மற்றும் 14 ஆயிரம் சதுரஅடி புல்தரை ஆகியவை போராட்டகாரர்களால் அழிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article