3 ஆயிரத்து 200 கடல் சங்குகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 200 கடல் சங்குகளை இன்று (21) பிற்பகல் மீட்டுள்ளதாகக் கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு அளவிலான கடல் சங்குகள் 40 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கற்பிட்டிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கற்பிட்டி பொலிஸ் விசேட பணியகத்துக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கற்பிட்டிப் பொலிஸ் பரிசோதகர் ஷான் முனசின்ஹ உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 28 வயதுடைய கற்பிட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.