நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம், மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் .
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .