வட்டுக்கோட்டையில் சிறுமி துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியாலேயே கைது!

வட்டுக்கோட்டையில் சிறுமி துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியாலேயே கைது!

editor 2

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பணிமனையின் நடவடிக்கையின் மூலமே வெளிக்கொணரப்பட்டது என்று அதன் இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்,

அவர் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில்,

‘குறித்த சிறுமி 12 வயதிலிருந்தே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த
நிலையில், கடந்த 24ஆம் திகதி எமது பணிமனைக்கு வந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை எமக்கு தெரிவித்தார்.

‘எமது பணிமனை துரிதமாக செயல்பட்டு அன்றைய தினமே வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஊடாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய
நிலையிலயே சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article