காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் உடலில் 11 இடங்களில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய நந்த குமார் சிவானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறையில் அண்மையில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.