வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் தொடர்பிலான விசாரணையின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது