பத்தேகம, மத்தேவில பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் கூரிய ஆயுதங்களால் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.