ஜனாதிபதி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்திப்பு!

ஜனாதிபதி - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்திப்பு!

editor 2

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வைத்தியர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை பாதீடு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச உள்ளிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Share This Article