யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் முல்லைத்தீவு வற்றாப்பளையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவர் காணாமல் போயிருந்தார்.
அவரை உறவினர்கள் தேடிய நிலையில் அங்குள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
சிறுவனின் மரணம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது கொலையா என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.