விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்பி காயம்!

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்பி காயம்!

editor 2

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (15) மாலை சம்பவித்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதே திசையில் பயணித்த வட்டா ரக வாகனம் திடீரென திரும்பிய போது அந்த வாகனத்தின் மீது மோதி வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பயணித்த இளங்குமரன் காயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This Article