2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களையும் இவ்வாறு விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (21) நடைபெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் பாப்பரசர் பிரான்சிஸிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.