நாளைய தினத்திலிருந்து மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றானது, மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.