இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றில் இன்று (09) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
பின்னர், குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மார்ச் 21ஆம் திகதி மாலை 6 மணியளவில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதேவேளை, புதிதாக வேட்புமனுக்களை பெற்று உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான விசேட ஏற்பாடுகளுடனான சட்டமூலம் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.