பிரபல பாடகர் பி.ஜெயசந்திரன் காலமானார்!

Editor 1

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்.

தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று போன்ற பல வெற்றிப் படப்பாடல்களை பாடியுள்ளார்.

அவருக்கு வயது 80.

கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Share This Article