புன்னாலைக்கட்டுவன் பகுதியில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

Editor 1

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இடம்பெறக் காரணமானவர் என நம்பப்படும் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில்,விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article